குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் துணைவியார் மறைவு (Photo)

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர்.குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் துணைவியாரும், தற்போதைய பதினொராவது நிர்வாக அதிகாரியான குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தாயாருமான   சுகிர்தாதேவி குமாரதாஸ் மாப்பாண முதலியார் இன்று ஞாயிற்றுக்கிழமை(28.01.2024) காலை குகபதமடைந்தார்.

அம்மையாரின் இறுதிக் கிரியைகள் யாழ்ப்பாணம் நல்லூர் மாப்பாணர் வளவில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (30.01.2024) இடம்பெறும்.