குப்பிழானில் இரத்ததான முகாம்: 26 பேர் ஆர்வத்துடன் குருதிக் கொடை

குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் 77 ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு மேற்படி சனசமூக நிலைய நிர்வாகம் ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(11.02.2024) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-01.30 மணி வரை  விக்கினேஸ்வரா சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.


 

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் நான்கு யுவதிகள் மற்றும் இளைஞர்கள் எனக் குப்பிழான் மற்றும் அயற் பகுதிகளைச் சேர்ந்த 26 பேர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர்.

இதேவேளை, மேற்படி சனசமூக நிலைய நிர்வாகம் முதல்தடவையாக இந்த இரத்ததான முகாம் நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளது. எதிர்வரும் காலங்களில் ஆறு மாதங்களுக்கு ஒருதடவை இரத்ததான முகாம் நிகழ்வு ஏற்பாடு செய்து நடாத்தப்படுமெனக் குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 


(செ.ரவிசாந்)