உடுவிலில் நாவலர் விழாவும் பாலர் பாடசாலை மாணவர்களின் பரிசளிப்பு விழாவும்

உடுவில் இந்து இளைஞர் மன்றம் நடாத்தும் நாவலர் விழாவும் பாலர் பாடசாலை மாணவர்களின் பரிசளிப்பு விழாவும்-2023 நாளை ஞாயிற்றுக்கிழமை (18.02.2024) பிற்பகல்-01.30 மணியளவில் உடுவில் மேற்குப் பாலர் பாடசாலை மண்டபத்தில் மன்றத் தலைவர் தி.தியாகச்சந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

மேற்படி நிகழ்வில் வலிகாமம் வலய ஆசிரிய ஆலோசகர் கணேசரத்தினம் ஆதித்தன் பிரதம விருந்தினராகவும். சைவப்புலவர் செ.த.குமரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.