உரும்பிராயில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்


உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பு, உரும்பிராய் மேற்கு இளைஞர் சனசமூக நிலையம், உரும்பிராய் மேற்கு இளைஞர் கழகம் ஆகியன இணைந்து 10 ஆவது ஆண்டாக ஏற்பாடு செய்து  நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (18.02.2024) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-02 மணி வரை உரும்பிராய் மேற்கு இளைஞர் சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் பங்குபற்றும் அனைவருக்கும் பயனுள்ள மரக்கன்று மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாகவும், இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக் கொடையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.

(செ.ரவிசாந்)