நாளாந்த மின்சாரத் தேவை அதிகரிப்பு!

தற்போது நிலவும் வறட்சி காரணமாக நாளாந்த மின்சாரத்திற்கான தேவை 3 முதல் 4 ஜிகாவாட் வரை அதிகரித்துள்ளதாகவும், நீர் மின் உற்பத்தி 21 வீதமாகக் குறைந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.

இதனால் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் இலங்கை மின்சார சபை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.