உரும்பிராயில் வருடாந்த மாபெரும் இரத்ததான முகாம் (Videos)

உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பு, உரும்பிராய் மேற்கு இளைஞர் சனசமூக நிலையம் மற்றும் உரும்பிராய் மேற்கு இளைஞர் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் புலம்பெயர் வாழ் உறவுகளின் நிதி அனுசரணையில் வருடாந்த மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(18.02.2024) உரும்பிராய் மேற்கு இளைஞர் சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்த இரத்ததான முகாம் நிகழ்வை யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள் விருந்தினராகக் கலந்து கொண்டு மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

இரத்ததானம் தொடர்பான மேலதிக விபரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளிகளில் நீங்கள் காணலாம்.