நெடுந்தீவில் நாளை முள்ளில்லாவேலி நூல் வெளியீட்டு விழாயாழ்.அளவெட்டி அருணோதயக் கல்லூரி ஆசிரியர் த.ஶ்ரீபிரகாஸ் எழுதிய நெடுந்தீவு நாட்டார் பாடல்களின் தொகுப்பு நூலான “முள்ளில்லாவேலி“ நூல் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை (17.02.2024) முற்பகல்-10 மணியளவில் யாழ்.நெடுந்தீவு மகா வித்தியாலயப் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நெடுந்தீவு மற்றும் வேலணை ஓய்வுநிலைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சா.கிருஷ்ணதாஸ் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் மூத்த சட்டத்தரணி சோ.தேவராஜா நூல் வெளியீட்டுரையையும், நெடுந்தீவுக்  கோட்டக் கல்வி உத்தியோகத்தர் கலைவாணி மோகன்ராஜ், சுன்னாகம் வாழ்வக மாணவன்  ச.அமலஅசாம், இலக்கிய ஆய்வாளர் ச.சத்தியதேவன் ஆகியோர் கருத்துரைகளையும் நிகழ்த்தவுள்ளனர். 

நிகழ்வில் செம்முகம் ஆற்றுகைக் குழுவினரின் கலைநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.