புற்றுநோயால் பீடிக்கப்பட்ட தொல்புரம் இளைஞன் உயிரிழப்பு!


கடந்த சில வருடங்களாகப் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருந்த தொல்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை (18.02.2024) உயிரிழந்துள்ளார்.

தரம்-11 இல் கல்வி கற்றுக் கொண்டிருந்த போதே இவர் புற்றுநோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தார். க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சித்திபெற்றுக் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்றார். எனினும், புற்றுநோய்த் தாக்கத்தின் அதிகரிப்பால் இவரால் மேற்கொண்டு கற்றலைத் தொடர முடியவில்லை. இந் நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதேவேளை, யாழ்.தொல்புரம் மேற்குப் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் சுலக்சன் (வயது- 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.