தெல்லிப்பழை முத்துமாரி அம்மனின் மாசிமக லட்சார்ச்சனை நிறைவு வைபவம்

யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ முத்துமாரி அம்மன் மாசிமக லட்சார்ச்சனை உற்சவத்தின் நிறைவுநாள் வைபவம் கடந்த வெள்ளிக்கிழமை (23.02.2024) சிறப்பாக இடம்பெற்றது. 

இதன்போது ஸ்நபன அபிஷேகம், விசேட பூசை, வசந்தமண்டபப் பூசை, நவசக்தி அர்ச்சனை, 108 கும்ப அபிஷேகம், அம்பாள் வீதி உலா வருதல் என்பன நடைபெற்றன.