யாழில் நாளை மின்தடைப்படவுள்ள இடங்கள்....

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை (27.02.2024) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி, காரைநகர் ஊரி, காரைநகர் தோப்புக்காடு, களபூமி, பாலக்காடு அம்மன் கோவிலடி, காரைநகர் சீனோர் படகுத்துறை,  காரைநகர் இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போ, காரைநகர் கடற்படைத் தளம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.