ஏழாலை தெற்கு மயிலங்காடு நாகலிங்கேஸ்வரர் பெருமான் பெருவிழா

யாழ்.ஏழாலை தெற்கு மயிலங்காடு நாகலிங்கேஸ்வரர் பெருமான் ஆலய அலங்கார உற்சவப் பெருவிழா இன்று புதன்கிழமை(28.02.2024) மாலை-06 மணியளவில் விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமானது.

தொடர்ச்சியாகப் பன்னிரெண்டு தினங்கள் இவ் ஆலய அலங்கார உற்சவப் பெருவிழா நடைபெறவுள்ளது. அடுத்தமாதம்- 07 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு சப்பரத் திருவிழாவும்,  மகா சிவராத்திரி நன்னாளான 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு-08 மணிக்குத் தேர்த் திருவிழாவும்,  மறுநாள்-09 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறுமென ஆலய பரிபாலனசபையினர் தெரிவித்துள்ளனர்.