கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இந்தியாவின் செயலூக்க உரைஞர் ஜெயந்தஸ்ரீயின் சிறப்புரை

இந்தியாவின் சிறந்த செயலூக்க உரைஞரும், புகழ்பெற்ற பேச்சாளருமான பேராசிரியர். ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அம்மையாரின் சிறப்புரை நேற்று முன்தினம் திங்கட்கிழமை (26.02.2024) மாலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட பேராசிரியர்.ஜெயந்தஸ்ரீ அம்மையார் 'கற்க கசடற' எனும் பொருளில் ஆசிரியர்களை மையப்படுத்திச் சிறப்புரை நிகழ்த்தினார். சிறப்புரை ஆற்றியமைக்காக  அம்மையார் மேற்படி கலாசாலைச் சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டார்.