இணுவில் ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (04.02.2024) காலை-09 மணி முதல் பிற்பகல்-12.30 மணி வரை சத்தியசாயி சேவா நிறுவனங்களின் வடபிராந்திய இணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் ஆன்மீக சாதனை வழிபாடு சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.
இதன்போது ஆலயச் சுற்றாடல் சங்கீர்த்தனம், சத்தியசாயி சேவா நிலையங்களைச் சேர்ந்த சாயி அன்பர்கள் தங்கள் கரங்களால் மூலவர் ஞானலிங்கேச்சுரப் பெருமானுக்கு சிவநாமத்தை ஓதியவாறு அபிடேகம் செய்தல், திருமுறைப் பாடல்கள் பாராயணம், சிவலிங்க அர்ச்சனை மற்றும் சிறப்புரை உள்ளிட்ட பல நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இவ் வழிபாட்டில் நூற்றுக்கும் அதிகமான சாயி அன்பர்கள் கலந்து கொண்டிருந்தனர்.