கோண்டாவில் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய சோபகிருது வருட அலங்காரத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை (01.03.2024) முற்பகல்-11 மணிக்கு விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்தும் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய அலங்காரத் திருவிழா நடைபெறவுள்ளது. அடுத்தமாதம்- 07 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை-03 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், இரவு-07 மணிக்கு தீமிதிப்புத் திருவிழாவும், 09 ஆம் திகதி சனிக்கிழமை காலை-08 மணிக்குத் தேர்த் திருவிழாவும், 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல்-11 மணிக்குத் தீர்த்தோற்சவமும் இடம்பெறுமென ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அலங்காரத் திருவிழா காலப் பகுதியில் தினமும் மாலை-06.30 மணிக்குச் சமயச் சொற்பொழிவு நடைபெறவுள்ளது.