பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியில் ஈழத்தமிழ் சிறுவன்!

 


திருகோணமலை மண்ணைச் சேர்ந்த 13 வயதேயான சிறுவனான ஹரிகரன் தன்வந்த் இலங்கை – இந்திய நாடுகளுக்கிடையில் அமைந்துள்ள பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியை நாளை வெள்ளிக்கிழமை(01.03.2024) நிகழ்த்தவுள்ளார்.  

இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரைக்குமான 32 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் சாதனைக்கான பயணத்தை தன்வந் நாளை அதிகாலை-12.05 மணியளவில் இந்தியாவின் தனுஷ்கோடியில் ஆரம்பித்து முற்பகல்-10 மணியளவில் தலைமன்னார் கரையில்  முடித்து வைப்பார்.

அதனைத் தொடர்ந்து நாளை பிற்பகல்-02 மணியளவில் அவரது சாதனைப் பயணத்தைப்  பாராட்டும் வகையிலான பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.