பிரதேச அபிவிருத்தி வங்கி வடமாகாண ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் காலமான வங்கியின் வடமாகாண ஊழியர்களான தெய்வேந்திரம் பகீசன், தனிக்க சஞ்சீவ சுமணதாச ஆகியோரின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த இரத்ததான முகாம் நிகழ்வு நாளை சனிக்கிழமை (02.03.2024) காலை-09 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை யாழ்.நகரில் அமைந்துள்ள பிரதேச அபிவிருத்தி வங்கியின் யாழ்ப்பாணக் கிளை அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் குருதிக் கொடையாளர்கள், ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.