யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் ஓ பாசிட்டிவ் வகை இரத்தத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் தெரிவித்தனர்.
ஆகவே, ஓ பாசிட்டிவ் வகை இரத்தத்தைக் கொண்ட குருதிக் கொடையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவுக்கு நேரடியாக வருகை தந்து குருதிக் கொடை வழங்கி உதவுமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலதிக விபரங்களிற்கு 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் இரத்தவங்கிப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.