யாழ்.மயிலணி சைவமகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி-2024 நாளை வியாழக்கிழமை(14.03.2024) பிற்பகல்-02 மணி முதல் மயிலணி முருகமூர்த்தி ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது.
மேற்படி பாடசாலையின் அதிபர் பா.பார்த்தீபன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் வலிகாமம் வலய ஆங்கில பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் சு.கலாதீபன் பிரதம விருந்தினராகவும், யாழ்.சில்லாலை றோ.க.த.க பாடசாலையின் அதிபர் திருமதி.ஏ.சண்முகநாதன் சிறப்பு விருந்தினராகவும், சுன்னாகம் சிவன் முன்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.கே.அம்பரீசன், மயிலணி வளர்பிறை முன்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.சா.தவேஸ்வரன், சுன்னாகம் கலைவாணி முன்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.ம.மனோகரன் மற்றும் பழைய மாணவர் பொ.சிறிரஞ்சன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பாடசாலைச் சமூகத்தினர் அழைத்துள்ளனர்.