தெல்லிப்பழை துர்க்காதேவி மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்புக் கலைநிகழ்வுகளின் நாளைய விபரம்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய மகா கும்பாபிஷேக காலப் பகுதியை முன்னிட்டு மேற்படி ஆலயத்தின் தெற்கு வீதியில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள மேடையில் சிறப்புக் கலைநிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நாளை வெள்ளிக்கிழமை(22.03.2024) இரவு-07 மணி முதல் இரவு-09.30 மணி வரை இடம்பெறவுள்ள நிகழ்வில் யாழ். இராமநாதன் கல்லூரி மாணவிகளின் குழு இசை, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவிகளின் குழுநடனம், கலாவித்தகர் அழகேசன் அமிர்தலோஜனின் தெய்வீக இசை அர்ப்பணம், யாழ்ப்பாணம் நாட்டார் கழகத்தினரின் சத்தியவான் சாவித்திரி இசை நாடகம் ஆகிய நிகழ்வுகள் இடம்பெறும்.