வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய மகா கும்பாபிஷேக காலப் பகுதியை முன்னிட்டு மேற்படி ஆலயத்தின் தெற்கு வீதியில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள மேடையில் சிறப்புக் கலைநிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகிறது.
இதற்கமைய, நாளை சனிக்கிழமை (23.03.2024) இரவு-07 மணி முதல் இரவு-09.30 மணி வரை நடைபெறவுள்ள நிகழ்வில் யாழ்.அளவெட்டி அருணோதயாக் கல்லூரி மாணவர்களின் குழு இசை, உடுவில் நிருத்திய நிகேதன் நாட்டியாலயம் வழங்கும் கிராமியக் கதம்பம், துர்க்காபுரம் மகளிர் இல்ல மாணவிகளின் இசை ஆராதனை, உடுவில் நாட்டிய கலாகேந்திரா கலாமன்றத்தின் ஆடல் அர்ப்பணம் ஆகிய நிகழ்வுகள் இடம்பெறும்.