கற்றல் உபகரணங்கள் மற்றும் பயனுள்ள மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் செயல்திட்டத்தின் இரண்டாவது பகுதியாக ஊர்காவற்துறை நாரந்தனை றோ.க.மகாவித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 52 மாணவர்களுக்கு இலவசக் கற்றல் உபகரணங்கள் மற்றும் பயனுள்ள மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (22.03.2024) முற்பகல்-11.30 மணியளவில் மேற்படி பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன குருமுதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள் சிறப்பு அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.