காரைநகரில் நாளை கடற்கரையோரச் சுத்தப்படுத்தல் செயற்திட்ட ஆரம்ப நிகழ்வு

உலக பூச்சிய கழிவு தினத்தை முன்னிட்டுக் காரைநகர் பிரதேச சபையினரின் ஏற்பாட்டில் கடற்கரையோரச் சுத்தப்படுத்தல் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை வியாழக்கிழமை (21.03.2024) காலை-07.30 மணிக்கு காரைநகர் கசூரினாக் கடற்கரையில் இடம்பெறவுள்ளது.

நாளைய தினம் காரைநகர் கசூரினாக் கடற்கரையோரம் முதல் தீர்த்தக் கரைப் பிரதேசம் வரை கடற்கரையோரச் சுத்தப்படுத்தல் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.      

எனவே,  குறித்த செயற்திட்டத்தில் பொது அமைப்புக்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு காரைநகர் பிரதேச சபையினர் அழைத்துள்ளனர்.