தெல்லிப்பழை துர்க்காதேவி மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நாளை ஆரம்பம்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்கக் கிரியைகள் நாளை புதன்கிழமை (20.03.2024) காலை-06.12 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகவுள்ளதாகவும், மகா கும்பாபிஷேக காலப் பகுதியை  முன்னிட்டுத் தினமும் இரவு ஆலயத்தின் தெற்கு வீதியில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள மேடையில் சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு திருமுருகன் தெரிவித்தார்.    

சிறப்பு நிகழ்வுகளின் வரிசையில் நாளை புதன்கிழமை இரவு-07.30 மணி முதல் இரவு-09 மணி வரை சிறப்பு நிகழ்வுகள் இடம்பெறும். நாளைய நிகழ்வுகளாகத் தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லப் பிள்ளைகளின் வில்லுப்பாட்டு, ஸ்ரீதுர்க்காதேவி அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகள், யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்களின் குழு இசை, குழு நடனம் என்பன இடம்பெறுமெனத் தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்ல அதிபர் திருமதி.சிவமலர் அனந்தசயனன் தெரிவித்தார்.    

 (செ.ரவிசாந்)