வடக்கு மாகாணப் புதிய பிரதம செயலாளராக இளங்கோவன் நியமனம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளராக கடமையாற்றி வந்த எல்.இளங்கோவன் வடக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான கடிதத்தினை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை(12.03.2024) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார். 

இதேவேளை, கடந்த 2021 ஆம் ஆண்டு ஜீலை மாதம் முதல் வடக்கு மாகாணப் பிரதம செயலாளராக  கடமையாற்றி வந்த சமன் பந்துலசேன கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.