யாழ்.பல்கலைக்கழகத்தில் நாளை உலக நாடகதின விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் உலக நாடக தின விழா-2024 நாளை புதன்கிழமை (27.03.2024) முற்பகல்-10 மணி முதல் மாலை-04 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் த.துலக்சன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.  

மேற்படி நாடக தின விழாவில் மாணவர்கள் மற்றும் தொழில் வாண்மைக் கலைஞர்களின் நாடகங்கள் அரங்கேறக் காத்திருப்பதாகவும், விழா நிகழ்வில் மாணவர்கள், ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற முடியுமெனவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.