வரலாற்றுப் பிரசித்திபெற்ற சுன்னாகம் கதிரமலைச் சிவன் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை புதன்கிழமை (27.03.2024) காலை-09.30 மணி முதல் முற்பகல்-11 மணி வரையான சுபவேளையில் நடைபெறவுள்ளது.
மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளது.
மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அடியவர்கள் எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் நேற்றுத் திங்கட்கிழமை (26.03.2024) இரவு-10 மணி முதல் இன்று செவ்வாய்க்கிழமை (26.03.2024) மாலை-06 மணி வரை இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவத்தில் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.