யாழ்.கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நிகழ்வு-2024 நாளை வியாழக்கிழமை (28.03.2024) பிற்பகல்-01.30 மணியளவில் மேற்படி பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
பாடசாலை அதிபர் கு.திலீபன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரும், பழைய மாணவருமான வைத்தியகலாநிதி.சி. யமுனாநந்தா பிரதமவிருந்தினராகவும், தொழிலதிபர் இ.குவேந்திரநாதன் சிறப்பு விருந்தினராகவும், கனடாவைச் சேர்ந்த பழைய மாணவர் தி.வேலும் மயிலும் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மேற்படி பாடசாலைச் சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.