குப்பிழான் வடக்கு எறும்புக்கடவை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை வெள்ளிக்கிழமை (29.03.2024) காலை-06.16 மணி முதல் காலை-07.08 மணி வரையுள்ள சுபவேளையில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, நேற்றுப் புதன்கிழமை (27.03.2024) காலை-06.30 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன் மகா கும்பாபிஷேகக் கிரியைகள் ஆரம்பமானது. இன்று வியாழக்கிழமை (28.03.2024) முற்பகல்-10 மணி முதல் பிற்பகல்-02 மணி வரை அடியவர்கள் எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவமும் நடைபெற்றது.