யாழில் நாளை இரத்ததான முகாம்
கெத்சமனே சுவிசேஷ சபையினர் பெரியவெள்ளியை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (29.03.2024) காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-01 மணி வரை மார்ட்டீன் வீதி, யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் மேற்படி சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறும், மேலதிக விபரங்களுக்கு 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும்  இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.