கோண்டாவில் கிழக்கு நாகபூசணி அம்பாள் பங்குனி உத்தர மஹோற்சவம்

கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய சோபகிருது வருட பங்குனி உத்தர மஹோற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை (15.03.2024) முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ் ஆலய மஹோற்சவம் இடம்பெற்று வருகிறது. எதிர்வரும்-22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு சப்பரத் திருவிழாவும், 23 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல்-10.50 மணிக்குத் தேர்த் திருவிழாவும், 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் இரவு கொடியிறக்க உற்சவமும் நடைபெறவுள்ளதாக மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.