யாழ். இணுவில் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை (19.03.2024) பிற்பகல்-01.30 மணி முதல் மேற்படி கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் கல்லூரி அதிபர் வே.உதயமோகன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் வலிகாமம் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.மதியழகன் பிரதம விருந்தினராகவும், வலிகாமம் வலய ஆசிரிய ஆலோசகர் க.சிவகரன், இணுவில் இந்து கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையின் உறுப்பினரும், பழைய மாணவருமான வி.சற்குணரட்ணம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.