கோண்டாவிலில் குடைச் சுவாமிகளின் குருபூசை

ஈழத்துச் சித்தர் குடைச் சுவாமிகளின் மாதாந்தக் குருபூசை நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (15.03.2024) கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள குடைச் சுவாமிகளின் சமாதி ஆலயத்தில் பக்திபூர்வமாக  இடம்பெற்றது.

குடைச் சுவாமிகளின் குருபூசையை முன்னிட்டுத் திருவாசக முற்றோதல் நிகழ்வு இடம்பெற்றது. நண்பகல்-12 மணியளவில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.