யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி-2024 நாளை மறுதினம் புதன்கிழமை(06.03.2024) பிற்பகல்-01.30 மணி முதல் கல்லூரி மைதானத்தில் மேற்படி கல்லூரியின் அதிபர் வி.ரி.ஜயந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
மேற்படி நிகழ்வில் வலிகாமம் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞானலிங்கம் ஆதவன் பிரதம விருந்தினராகவும், தெல்லிப்பழைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் வேலாயுதர் அரசகேசரி சிறப்பு விருந்தினராகவும், வலிகாமம் வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் சிவலிங்கம் முரளிதரன், வலிகாமம் வலய உடற்கல்வி சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் நடராஜா கஜேந்திரன், பழைய மாணவர் அப்புத்துரை பாலகிருஷ்ணன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நிகழ்வில் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மேற்படி கல்லூரிச் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.