மகா சிவராத்திரியை முன்னிட்டுக் கீரிமலையில் நாளை இரத்ததான முகாம்

மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு அகில இலங்கை சைவமகா சபை நடாத்தும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை புதன்கிழமை (06.03.2024) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-01.30 மணி வரை கீரிமலை குழந்தைவேல் சுவாமி அறப்பணி நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இவ் இரத்ததான நிகழ்வில் குருதிக் கொடையாளர்கள், ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கலந்து கொண்டு இரத்தானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அகில இலங்கை சைவமகா சபையினர் அழைத்துள்ளனர். 

(செ.ரவிசாந்)