இணுவில் திருப்பதி திருவேங்கடேஸ்வரர் ஆலய லட்சார்ச்சனை விழாவின் பூர்த்தி வழிபாடு நாளை வியாழக்கிழமை (07.03.2024) மாலை-03 மணியளவில் பகவத் கீதா ஹோமத்துடன் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.
தாரா ஹோமம் பூர்ணாகுதி, சர்வ உபசார பூசை நடைபெற்றுக் கும்ப வீதி உலா, கும்ப புரோட்சணம் என்பன நடைபெறும்.
இதேவேளை, இவ் ஆலய லட்சார்ச்சனை விழா கடந்த மாதம்-27 ஆம் திகதி ஆரம்பமாகித் தொடர்ந்தும் பத்துத் தினங்கள் நடைபெற்று வருகின்றது.