வடக்கின் பெரும்போர் யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் நாளை ஆரம்பம்

வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் யாழ்.மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி ஆகிய பாடசாலை அணிகளுக்கு இடையிலான 117 ஆவது துடுப்பாட்டப் போட்டி நாளை  வியாழக்கிழமை (07.03.2024) காலை யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டி எதிர்வரும்-09 ஆம் திகதி சனிக்கிழமை வரை தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ளது.

இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்ட வரலாற்றில் மிகவும் பழைமை வாய்ந்த மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் இது ஒன்றாகும். கடந்த வருடம் நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியில் யாழ்.மத்திய கல்லூரி அணி வெற்றியீட்டியிருந்தது.

இவ் வருடம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இரு கல்லூரி அணிகளும் மோதுவதால் போட்டிகள் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.