குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத்தில் நாளை வெள்ளிக்கிழமை (08.03.2024) மகாசிவராத்திரி விரத வழிபாடுகள் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
நான்கு சாமப் பூசை வழிபாடுகளும் சிறப்பாக இடம்பெற்று சுவாமி வீதி உலா இடம்பெற்று நாளை மறுதினம் சனிக்கிழமை (09.03.2024) அதிகாலை-05.30 மணியளவில் தீர்த்தம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அன்னதானமும் இடம்பெறுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.