மயிலணிச் சிவன் ஆலயத்தில் நாளை மகா சிவராத்திரி விழா

'மயிலணிச் சிவன்' என அழைக்கப்படும் சுன்னாகம் மயிலணி ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலய மகா சிவராத்திரி விழா நாளை வெள்ளிக்கிழமை (08.03.2024) மாலை-06.30 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.  

நான்கு சாமப் பூசைகளும் சிறப்பாக நடைபெறும். நாளை நள்ளிரவு-12 மணிக்கு மூன்றாம் சாமப் பூசை இடம்பெறும். பஞ்சமுக அர்ச்சனை, அதனைத் தொடர்ந்து விஸ்வநாத சுவாமியின் வீதி உலா இடம்பெற்று லிங்கோற்பவ தரிசனக் காட்சியும் நடைபெறும்.    

அடியவர்கள் ஆலயக் கிணற்றில் நீராடி ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அருணாசலேஸ்வர மகாலிங்கப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தும், நெய் தீபம் ஏற்றியும் வழிபட முடியுமென ஆலயப் பிரதமகுரு தெரிவித்துள்ளார்.