யாழ்.பொலிகண்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி-2024 நிகழ்வு நாளை புதன்கிழமை(06.03.2024) பிற்பகல்-01.30 மணி முதல் மேற்படி பாடசாலை மைதானத்தில் அதிபர் ந.தேவராஜா தலைமையில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் வடமராட்சி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ஜனனி லதர்ஸன் பிரதம விருந்தினராகவும், பொலிகண்டி கிழக்கு கிராம அலுவலர் திருமதி.ஜனனி ரவீந்திரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.