ஊரெழு சிவபூரணி அறநெறிப் பாடசாலை நடாத்தும் மகா சிவராத்திரி விழா நாளை வெள்ளிக்கிழமை (08.03.2024) இரவு-08 மணி முதல் மறுநாள் சனிக்கிழமை அதிகாலை வரை ஊரெழு சிவபூரணிக் காளி அம்மன் ஆலய முன்றலில் அறநெறிப் பாடசாலை அதிபர் து.ஜெகதீஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் முன்பள்ளிச் சிறார்கள், அறநெறிப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஊரெழு இளைஞர்களின் பல்வேறு கலைநிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.