அம்பனில் நாளை இரத்ததான முகாம்இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்- யாழ் கிளை மருதங்கேணிப் பிரிவின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (15.03.2024) காலை-09 மணி முதல் வடமராட்சி அம்பன் பிரதேச மருத்துவமனை  மண்டபத்தில் நடைபெறவுள்ளது.  

குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துக் குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.