குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் மாதாந்த விநாயகர் சதுர்த்தி வழிபாடு

மாதாந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை(13.03.2024) முற்பகல்-10 மணிக்கு குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் பொங்கல் வழிபாடுகள் ஆரம்பமானது. 

அதனைத் தொடர்ந்து ஆச்சிரம முன்றலில் எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகளும் நடைபெற்றது.