தெல்லிப்பழை துா்க்காபுரம் மகளிா் இல்லத்தின் 42 ஆவது ஆண்டு நிறைவு விழா

தெல்லிப்பழை துா்க்காபுரம் மகளிா் இல்லத்தின் 42 ஆவது ஆண்டு நிறைவு விழா நாளை சனிக்கிழமை (27.04.2024) மாலை-03 மணியளவில் தெல்லிப்பழை ஸ்ரீ துா்க்காதேவி ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அன்னபூரணி மண்டபத்தில் மேற்படி ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வா் கலாநிதி. ஆறு.திருமுருகனின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

விழா நிகழ்வில் தெல்லிப்பழைப் பிரதேச செயலாளா் திருமதி.சிவகெங்கா சுதிஸ்னர் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பல் வைத்தியர் வைத்தியகலாநிதி. திருமதி. குமாரலோஜினி கணேசன் சிறப்பு விருந்தினராகவும், யாழ்.சுன்னாகம் இராமநாதன் கல்லுாாியின் அதிபா் திருமதி.அம்பிகை சிவஞானம் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.