தெல்லிப்பழை கூட்டுறவு வைத்தியசாலைச் சங்கத்தின் பொதுக் கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை (28.04.2024) காலை-09 மணி முதல் தெல்லிப்பழை கூட்டுறவு வைத்தியசாலையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
தெல்லிப்பழை கூட்டுறவு வைத்தியசாலைச் சங்கத்தின் தலைவர் ஆசை சுதன் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த பொதுக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கி.சந்திரசேகரன் பிரதம விருந்தினராகவும், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.க.கெளசிகா சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.