முதுபெரும் எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகனின் இரு நூல்களின் வெளியீட்டு விழா

 

மறைந்த முதுபெரும் எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகனின் முதலாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டுக் குப்பிழான் ஐ.சண்முகனின் இரசனைக் குறிப்புகள், குப்பிழான் ஐ.சண்முகனின் சிறுகதைகள் ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (28.04.2024) காலை-09.30 மணி முதல் குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரம மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஓய்வுநிலைக் கிராம அலுவலர் சோ.பரமநாதன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

நிகழ்வில் ஊடகவியலாளர் செ.ரவிசாந் வரவேற்பு உரையையும், மூத்த எழுத்தாளர் அ.யேசுராசா விசேட உரையையும், அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் நூல் வெளியீட்டு உரையையும், மூத்த எழுத்தாளர் வடகோவை வரதராஜன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் த.அஜந்தகுமார் ஆகியோர் கருத்துரைகளையும் ஆற்றுவர். திருமதி.புனிதவதி சண்முகலிங்கன் ஏற்புரையும் நன்றியுரையும் நிகழ்த்துவார்.