வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு வருடாந்தம் பெரும் விழாவாகக் கொண்டாடப்படும் இந்திர விழா நேற்றுச் செவ்வாய்க்கிழமை (23.04.2024) இரவு 57 ஆவது தடவையாகவும் வல்வெட்டித்துறையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
ஆடல், பாடல், பொம்மலாட்டங்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வர்ண மின் விளக்குகளால் ஊரே ஜொலிக்கும் வகையில் காட்சியளித்தமை காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.