தெல்லிப்பழை வீணாக்கடவை காசி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று புதன்கிழமை (24.04.2024) முற்பகல்-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ் ஆலய மஹோற்சவம் இடம்பெறும்.
இவ் ஆலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு-07 மணியளவில் பக்தமுத்திப் பாவனோற்சவமும், 29 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை-06.30 மணியளவில் வசந்தோற்சவமும், எதிர்வரும்-01 ஆம் திகதி முற்பகல்-11 மணியளவில் வேட்டைத் திருவிழாவும், இரவு-07 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 02 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-09 மணியளவில் தேர்த் திருவிழாவும், 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-09 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் மாலை-06.30 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.
மஹோற்சவ காலங்களில் தினமும் காலைத் திருவிழா காலை-08.45 மணிக்கும், மாலைத் திருவிழா மாலை-05.45 மணிக்கும் ஆரம்பமாகும்.