நாங்கள் எதற்கும் அஞ்சாத தலைவரின் பிள்ளைகள்: தையிட்டிப் போராட்டத்தில் முழங்கிய சுகாஸ் !

நாங்கள் எதற்கும் அஞ்சாத தலைவரின் பிள்ளைகள் எனச் சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஸ் பலாலிப் பொலிஸாரை நோக்கி முழக்கமிட்டுள்ளார்.  


தையிட்டியில் தமிழ்மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை ஆக்கிரமித்துச் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்திற்கு எதிராகவும், விகாரையைச் சுற்றியுள்ள தனியாரின் காணிகளை உரியவர்களிடம் மீளவும் கையளிக்குமாறு வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்றுத் திங்கட்கிழமை (22.04.2024) மாலை விகாரை அமைந்துள்ள வீதியின் முகப்பிற்கு வெளியே மீண்டும் ஆரம்பமான போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று (23.04.2024) கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு முழக்கமிட்டுள்ளார்.