யாழ். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் உப அதிபரும், மூத்த உடற்கல்வி ஆசிரியருமான திருமதி.ஜெயந்தி ஜெயதரன் இன்று வியாழக்கிழமை (25.04.2024) மாலை உடல்நலக் குறைவு காரணமாகத் திடீரெனக் காலமானார். இவரது மறைவு கல்வி மற்றும் விளையாட்டுத் துறைசார் தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவர் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி உள்ளிட்ட பல பாடசாலைகளில் பல விளையாட்டு வீராங்கனைகளை உருவாக்கிய பெருமைக்குரியவராவார்.