குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டுக் கிராம ஊர்வலம் நாளை வெள்ளிக்கிழமை (26.04.2024) மாலை-04 மணியளவில் மேற்படி ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமாகவுள்ளதாக மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில் இன்று வியாழக்கிழமை (25.04.2024) இரவு கிராமம் முழுவதும் அறிவிப்புப் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.